#viral: 50 அடி உயரத்தில் இருந்து 50 பேருடன் கீழே விழுந்த ராட்டினம்
பஞ்சாபில் 50 பேருடன் கார்னிவல் ராட்டினம் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது, 15 பேர் காயம்.
பஞ்சாபின் மொஹாலியில் நேற்று(செப் 4) நடந்த கண்காட்சியின் போது ஏறக்குறைய 50 பேருடன் இருந்த ராட்டினம் உடைந்து 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் குறைந்தது 15 பேர், பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அந்த ராட்டினத்தின் ஆப்ரேட்டர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
#Breaking#Mohali Carnival Swing Shocker: Gravity ride at Mohali Carnival breaks between ride, comes crashing down from 50 feet in viral video- several people injured.@Gurpreet_Chhina and @Anchoramitaw with more on the incident. pic.twitter.com/2Rdxsle5sL
— TIMES NOW (@TimesNow) September 5, 2022