“இரக்க குணம் தான் தங்கம்”…இளவரசர் அழைப்பை மறுத்த ரத்தன் டாடா..வெளியான நெகிழ்ச்சி தகவல்!
ரத்தன் டாடாவின் வாழ்க்கையில் நடத்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து தொழிலதிபர் சுஹெல் சேத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மும்பை : மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தொழில் ரீதியாகப் பெரிய அளவில் பெயர் பெற்றதை விட, தன்னுடைய நல்ல குணத்தின் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர். இதன் காரணமாகத் தான், அவர் இந்த மண்ணை விட்டு மறைந்த நிலையில், அவருக்காக எமோஷனலாக மக்கள் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் அவர் நேற்று காலமானார்.
இதனையடுத்து, ரத்தன் டாடா பற்றிய பல விஷயங்களும் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அதனை மக்களும் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்காக, ரத்தன் டாடா எவ்வளவு இரக்கம் உள்ளம் கொண்ட மனிதர் என்பதை உணர்த்தும் வகையில், ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அதாவது, கடந்த 2018 ஆம் ஆண்டில், அப்போதைய வேல்ஸ் இளவரசராக இருந்த மன்னர் சார்லஸ் , ரத்தன் டாடாவின் சிறந்த முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்க நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவருக்கு விருது அளிக்கும் இந்த நிகழ்வு பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதே போல பிரமாண்டமானபக்கிங்ஹாம் அரண்மனை இடத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.
Read More- மாமனிதர் ரத்தன் டாடா! இதுவரை வாங்கிய விருதுகள் என்னென்ன தெரியுமா?
அந்த விழாவிற்கு அழைப்பு வந்தவுடன் வருகிறேன் எனவும் ரத்தன் டாடா அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்பிறகு, நிகழ்ச்சிக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தபோது திடீரென அவர் வளர்க்கும் இரண்டு நாய்க்குட்டிகளில் ஒரு நாய்க்கு உடல் நிலை சரியில்லாமல் ஆகியுள்ளது. இதனைக் கவனித்த ரத்தன் டாடா நாய்க்குட்டியைக் கவனிக்கத் தொடங்கியுள்ளார்.
பிறகு, மன்னர் சார்லஸ் அழைத்த அதே விழாவிற்குச் செல்லும் மற்றொரு தொழிலதிபரானர் சுஹெல் சேத்க்கு 11 முறை ரத்தன் டாடா கால் செய்து இருக்கிறார். இவ்வளவு முறை எதற்குக் கால் செய்து இருக்கிறார் எனப் பதட்டத்துடன் திரும்பி கால் செய்து ர் சுஹெல் சேத் என்ன அச்சு என்பது போலக் கேட்டுள்ளார்.
அதற்கு ரத்தன் டாடா அழுகை குரலுடன் ” என்னால் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை என்னுடைய நாய்க்குட்டிக்கு உடல் நிலை சரியில்லை. நான் போகிறேன் என்று சொன்னால் அழுதுகொண்டு சாப்பிடக் கூட மாட்டிக்கிறது..மருந்தும் எடுத்துக்கொள்ளவில்லை.. இந்த சூழ் நிலையில், அதனை விட்டுவிட்டு என்னால் வரமுடியாது.
விழா பெரிய விழா என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நான் ஆசையாக வளர்த்த இந்த நாய்க்குட்டியை இப்படி விட்டு வரமாட்டேன்” என வேதனையுடன் கூறியுள்ளார். இருப்பினும், ரத்தன் டாடா விழாவிற்கு வரவில்லை என்பதைப் பற்றி மன்னர் சார்லஸ் கோபப்பட்டுப் பேசாமல் அவருடைய இரக்கத் தன்மை குணத்தைப் புரிந்து கொண்டு ரத்தன் டாடாவை உலகம் முழுவதும் கொண்டாட இது தான் முக்கிய காரணம் எனப் பாராட்டிப் பேசியுள்ளார்.
இப்படியான இதயத்தை உருக்கும் கதையைத் தொழிலதிபர் சுஹெல் சேத் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.