உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஊழியரை வீடு தேடி சென்று நலம் விசாரித்துள்ளார் தொழிலதிபர் ரத்தன் டாடா.
83 வயதான இவர் டாடா குழுமம் நிறுவனங்களின் தலைவராக பதவி வகித்த பிறகு தற்போது அறக்கட்டளை பணிகளை முன்னின்று கவனித்து வருகிறார். இவரது நிறுவனத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற முன்னாள் ஊழியர் ஒருவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இவரை பார்ப்பதற்காக மும்பையில் இருந்து புனே சென்ற ரத்தன் டாடா, வீட்டில் இருந்த அவரை நேரில் சென்று நலம்விசாரித்தார்.
ரத்தன் டாடாவின் வருகையை எதிர்பாராத அந்த ஊழியரின் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சியில் திகைத்து நின்றனர். முன்னாள் ஊழியர் ஒருவரின் வீடு தேடிச் சென்று சந்தித்து நலம் விசாரித்த முன்னணித் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் இந்தச் செயலை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்தியாவின் பிரபல தொழிலதிபராக திகழ்பவர் ரத்தன் டாடா, ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் உள்பட பலருக்கு தனது தொண்டு நிறுவனம் மூலம் உதவிகளைச் செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…