ஏர் இந்தியா விமானத்தில் எலி..! 12 மணிநேர தாமதம்..!
ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானத்தில் எலி இருந்ததாக கூறியதால் ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் ஏர் இந்தியா விமானம் கிட்டத்தட்ட 12 மணி நேரம் தாமதமானது.
காலை 6 மணிக்கு புறப்பட இருந்த இந்த விமானம் மாலை 5.30 மணியளவில் புறப்பட்டது.எலி இருப்பதாக விமானி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் பொறியியல் துறைக்கு மற்றும் ஏர் இந்தியா அதிகாரிகள் உடனடியாக முழு விமானத்தையும் தகவல் கொடுக்கப்பட்டது.
மேலும் எலியால் விமானத்திற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டு உள்ளதா என முழுமையான முழுமையாக விமானத்தை பரிசோதனை செய்தனர். இதைத் தொடர்ந்து விமானம் பறக்க அனுமதி வழங்கப்பட்டது.
@DGCAIndia Rat menace delays AI 952 by 08 hrs 15 min which later enroute becomes AI452 I.E. VZG-DEL. Spotting of rat is a serious case of complacency. Lot of passengers stranyded at VZG Airport. Flight boarding still not commenced. Aviation ministry pls look into the matter pic.twitter.com/gY0dWrUCnw
— sunny (@Duggal1985Vd) November 10, 2019
விமானம் தாமதமாக சென்றதால் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் பயணிகள் மத்தியில் கோபம் எற்பட்டது. மேலும் சிலர் சமூக வலைத்தளங்களில் கூட தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர்.