ராஷ்டிரபதி பவனின் முகல் கார்டன்ஸ், அம்ரித் உத்யன் என பெயர் மாற்றம்.!
ராஷ்டிரபதி பவனில் உள்ள முகல் கார்டன்ஸ், அம்ரித் உத்யன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியின் ராஷ்டிரபதி பவனில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயரை, மத்திய அரசு அம்ரித் உத்யன் என மாற்றியது. ஜனாதிபதி திரௌபதி முர்முவின் துணைப் பத்திரிகைச் செயலாளர் நவிகா குப்தா கூறுகையில், ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்- இன் கீழ் ஜனாதிபதி முர்மு, ராஷ்டிரபதி பவனின் தோட்டங்களுக்கு ‘அம்ரித் உத்யன்’ என்ற பொதுவான பெயராக மாற்றியுள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் ‘அம்ரித் மஹோத்சவ்’ -இன் அடிப்படையில், முகலாய தோட்டத்தின் பெயரை அம்ரித் உத்யன் என்று மத்திய அரசு மாற்றியுள்ளது. ஜனவரி 29, அன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களால், அம்ரித் உதயன் திறந்து வைக்கப்படும், என்றும் ஜனவரி 31 முதல் மார்ச் 26 வரை இரண்டு மாதங்களுக்கு இந்த அம்ரித் உத்யன் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பார்வைக்காக மட்டுமல்லாமல் விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்புக் குழுக்களின் பார்வைக்காகவும் தோட்டத்தை திறந்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நவிகா குப்தா மேலும் கூறினார்.