திருவனந்தபுரத்தில் கோட்டூர் அருகே காப்புக்காடு யானைகள் முகாமில் அரிய வகை வைரஸ் தாக்கி 2 குட்டி யானைகள் பலி.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் கோட்டூர் அருகே காப்புக்காடு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ள நிலையில், இந்த முகாமில் உள்ள யானைகளை ஹெர்ப்ஸ் என்ற அரியவகை வைரஸ் தாக்கி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலினால் கடந்த 10 நாட்களில் ஸ்ரீ குட்டி மற்றும் அர்ஜுன் என்ற இரண்டு குட்டிகள் உயிரிழந்துள்ளது.
மேலும் இந்த முகாமில் கண்ணன், அமீனா ஆகிய குட்டி யானைகளும் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இந்த இரண்டு குட்டிகளும் 4 வயதுக்கு உட்பட்டவை ஆகும். இந்த வகை வைரஸ் 1 முதல் 10 வயது வரை உள்ள குட்டி யானைகளை தான் தாக்குகிறது.
மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் யானைகள் இறந்து விடுவதாக கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து, கேரள வனத்துறை அமைச்சர் தலைமையில், அதிகாரிகள் குட்டி யானைகளை காக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…