இந்தியாவில் விளையும் அரியவகை மாம்பழம்..! ஒரு கிலோ ரூ.2.70 லட்சம்..!

Default Image

இந்தியாவில் அரியவகை மாம்பழமான மியாசாகி வகையை வளர்த்து அதிக லாபத்தை பெற்று வரும் தம்பதி ஒரு மாம்பழத்தின் விலை ரூ.21,000. 

மத்திய பிரதேசம் ஜபால்பூர் பகுதியில் வசிக்கும் தம்பதியினர் சங்கல்ப் பரிஹாஸ் மற்றும் ராணி. இவர்கள் இருவரும் ஒருமுறை சென்னை வந்துள்ளனர். அப்போது ஒருவர் அரியவகை மா மரக்கன்றுகளை இவர்களுக்கு கொடுத்துள்ளார். இவர்களும் சாதாரண மா மரக்கன்றுகளை போன்று இவர்களது தோட்டத்தில் வைத்து வளர்த்துள்ளனர். இது பெரிய மரமாகி பழங்கள் வைக்கும் போதுதான் இதன் அதியசயத்தை அறிந்துள்ளனர். இந்த மாம்பழம் சாதாரண மாம்பழங்களை போன்று மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இல்லாமல் சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது.

பிறகு இந்த மாம்பழத்தை குறித்த செய்திகளை தேட ஆரம்பித்துள்ளனர். இதன் பின்னரே இவர்களுக்கு இந்த மாம்பழத்தின் அதிசயம் தெரிய வந்துள்ளது. ரூபி சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த மாம்பழம் ஜப்பான் நாட்டில் மியாசாகி என்ற இடத்தில் இது முதன் முதலாக பயிரிடப்பட்டுள்ளது. மேலும், இது மருத்துவகுணங்கள் நிறைந்திருப்பதால் இதற்கு சர்வதேச பழங்கள் சந்தையில் அதிக விலை போகும் மாம்பழம் என்று தெரிந்துகொண்டுள்ளனர். கடந்த வருடம் இந்த மாம்பழத்தை ஒரு கிலோ ரூ.2.70 லட்சத்திற்கு விற்றுள்ளனர். கடந்த வருடம் இந்த அரிய மாம்பழத்தின் செய்திகளை அறிந்து சில திருடர்கள் மாம்பழத்தை திருடி சென்றுள்ளனர்.

அதனால் இந்த வருடம் 4 காவல்காரர்கள், 6 நாய்கள் என்ற பாதுகாப்புடன் இந்த மாம்பழங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரு மாம்பழத்தின் விலை ரூ.21,000 என்றும் தெரிவித்துள்ளனர். இதில், பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இது பார்வை குறைபாடுகளை சரிசெய்வதில் வல்லமை பெற்றது. இதன் அபூர்வத்தை தெரிந்து கொண்ட இவர்கள் இதனை மேலும் அதிகரிக்க இருப்பதாக தோட்டத்தின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்