ரேபிட் டெஸ்ட் கருவி திருப்தியாக உள்ளது – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்!
ரேபிட் டெஸ்ட் கருவி திருப்திகரமாக உள்ளது, விரைவில் கொரோனா கண்டறிய உதவுகிறது.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்ல கூடிய நிலையில், மக்கள் செல்ல வேண்டாம் எனவும், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்த பட வேண்டும் எனவும் அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த கொரோனா வைரஸை விரைவில் கண்டறிவதற்காக ரேபிட் டெஸ்ட் கருவி சீனாவிலிருந்து செய்யப்பட்டது. இந்த கருவி திருப்திகரமாக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுண்ஸில் கூறியுள்ளது. கொரோனா சந்தேகத்திலிருந்த 80% பேருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.