விரைவில் இந்தியாவிற்கு வரும் ரேபிட் கிட் கருவிகள்
37 லட்சம் ரேபிட் கிட் கருவிகள் விரைவில் இந்தியாவிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்தவர்கள் கூட்டாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்கள்.அப்பொழுது அவர்கள் கூறுகையில்,நாடு முழுவதும் இதுவரை 2,31,902 மாத்திரைகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 6 வாரங்களுக்கு தேவையான பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1211 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,ரேபிட் கிட் கருவி மூலமாக ஒருவருக்கு 30 நிமிடங்களில் கொரோனா உள்ளதா என்பதை கண்டறிய முடியும் ஈன்று தெரிவித்துள்ளனர்.