ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் – மத்திய அரசு
தனியார் மருத்துவமனைகளிலும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்க அரசுகளுக்கு வலியுறுத்தல்.
இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், ஓமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகளை அதிகரிக்க வலியுறுத்தியுள்ளது.
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் சற்று காலதாமதம் ஆவதால் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனைகளிலும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.