இந்தியாவிடம் 5 ரபேல் போர் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு பாரிஸிற்கு ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஃப்ரான்கோய்ஸ் ஹோலண்டேவுடன் இணைந்து புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். அதில் பறக்கும் நிலையில் தயாராக இருக்கும் 36 உயர் ரக போர் விமானங்களை பிரான்ஸில் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அந்த 36 விமானங்களும் உடனடியாக வாங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். மேலும் இந்த விமானத்தை ரூ.59 ஆயிரம் கோடிக்கு வாங்கப்பட்டுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே 2020 ஜூலை இறுதிக்குள் இந்தியாவில் 5 ரபேல் போர் விமானங்கள் களமிறக்கப்படும் என இந்திய விமானப்படை தெரிவித்தது. ஜூலை 29-ம் தேதி விமானப் படையில் இந்த ரபேல் விமானங்கள் சேர்க்கப்படும் எனவும் இந்திய விமானப்படை தெரிவித்தது.
சீனா, பாகிஸ்தானில் உள்ள ராணுவ விமானங்களை விட இலக்குகளை குறிவைத்து தாக்குவதில் ரபேல் விமானம் சிறந்தது எனவும், அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் வரையிலான இலக்குகளை துரத்தி அழிக்கும் வல்லமை கொண்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.இவை அம்பாலா மற்றும் ஹசிமாரா (மேற்கு வங்காளம்) ஆகிய விமானப்படை தளத்தில் களமிறக்கப்பட உள்ளது.இந்நிலையில் இந்தியாவிடம் 5 ரபேல் போர் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐந்து ரபேல் போர் விமானங்கள் பிரான்சின் மெரிக்னாக் நகரிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் நாளை மறுநாள் அம்பாலா விமானப்படை தளத்தில் களமிறக்கப்பட உள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…