இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது ரபேல் போர் விமானங்கள்.
கடந்த 2016-ம் ஆண்டு பிரான்சில் இருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இரு நாட்டு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுனது. இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்த 36 விமானங்களில் முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணி முடிவடைந்ததால் கடந்த அக்டோபர் மாதம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்று விமானங்களுக்கு பூஜையும் செய்தார்.10 விமானங்களில் 5 விமானங்கள் பயிற்சிக்காக பிரான்சிலேயே இருந்தது. மீதமுள்ள 5 விமானங்கள் பிரான்சில் இருந்து ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு வந்தடைந்தது.
இந்நிலையில் அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 ரபேல் விமானங்கள் முறைப்படி விமானப்படையில் இணைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சிக்குப் பின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அம்பாலாவில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…