பாலியல் பலாத்காரத்துக்கு மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கரில் எதிர்ப்புத் தெரிவித்த 13 வயதுச் சிறுமியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீக் கொளுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 13வயதுச் சிறுமியை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதற்கு அந்தச் சிறுமி எதிர்ப்புத் தெரிவித்ததால், அவள் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீவைத்துக் கொளுத்தியுள்ளார். சிறுமியின் அழுகுரல் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ராஜ்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
50விழுக்காடு தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வரும் அந்த சிறுமியை உயர்சிகிச்சைக்காக போபால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்த வன்முறை குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…