சிறுமி மீது தீவைப்பு!பாலியல் பலாத்காரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் கொடூரம்…..

Default Image

பாலியல் பலாத்காரத்துக்கு மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கரில்  எதிர்ப்புத் தெரிவித்த 13 வயதுச் சிறுமியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீக் கொளுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 13வயதுச் சிறுமியை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதற்கு அந்தச் சிறுமி எதிர்ப்புத் தெரிவித்ததால், அவள் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீவைத்துக் கொளுத்தியுள்ளார். சிறுமியின் அழுகுரல் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ராஜ்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

50விழுக்காடு தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வரும் அந்த சிறுமியை உயர்சிகிச்சைக்காக போபால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்த வன்முறை குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்