கேரளா எம்.பி. மனைவிக்கு பாலியல் தொந்தரவு!பின்வாங்கும் மூத்த அரசியல் தலைவரின் மகன்?
கேரளா எம்.பி. ஜோஸ் மாணியின் மனைவி, மூத்த அரசியல் தலைவரின் மகனால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளா காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.எம். மாணியின் மருமகள் நிஷா ஜோஸ் மாணி.
இவர் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில், 2012ஆம் ஆண்டில் ரயிலில் பயணம் செய்த போது மூத்த அரசியல் தலைவர் ஒருவரின் மகனால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாகவும், லஷ்மண் கோட்டை தாண்டி அந்த நபர் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிஷா ஜோஸ் மாணி கூறும் புகார்கள் தம்மை மையப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தும்படியும் எம்.எல்.ஏ. PC ஜார்ஜ் மகனான ஷோன் ஜார்ஜ் ((Shone George)) காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.