ரபேல் வழக்கு :மறு சீராய்வு மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மறு சீராய்வு மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது உச்சநீதிமன்றம்.
முதலில் ரபேல் ஒப்பந்தத்தை முன்னெடுத்தது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு தான்.
அதன் பின்னர ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் மோடி 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார் .
மேலும் 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர்.அவர் முன்னிலையில் 2016 செப்டம்பரில் ரிலையன்ஸ்-டஸ்ஸால்ட் நிறுவனங்களுக்கிடையில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நாளில் இருந்தே காங்கிரஸ் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றது.
நரேந்திர மோடியின் அரசு ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் நாடாளுமன்ற நிலைக்குழு, டெண்டர், தொழில்நுட்பக் குழு, மதிப்பீடு, பரிசீலனை என எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவு அறிவிக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினார்கள்.
அதற்கு பிறகு காங்கிரஸ் கட்சியினர் போர் விமானம் குறித்த தொழில்நுட்பம் தான் இரகசியம் காக்கபடவேண்டும்.அதன் விலை அல்ல என குற்றம் சாட்டியது.
இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அப்போதைய பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா ஆலந்து ரிலையன்ஸ் தான் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று இந்திய அரசு வற்புறுத்தியதால் எங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை கூறியது மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில், பல ஊழல்கள் நடந்துள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில் உச்ச நீதிமன்றம் ரபேல் போர் விமானம் வாங்கப்பட்ட தொகை, ஒப்பந்தம் ஆகிய அனைத்தும் சரியான முறையில் தான் இருக்கிறது என தீர்ப்பு வழங்கியது. மேலும் அது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது.
மறு சீராய்வு :
அதனை தொடர்ந்து மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யபட்டது.இதில் வழக்கு தொடர்ந்தவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்களது வாதத்தை முன் வைத்தனர்.அதேபோல் திருடுபோன ரபேல் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில்தான் பத்திரிகையில் தகவல் வெளியிடப்பட்டது. அந்த ஆவணங்களை ஏற்கக்கூடாது என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது உச்சநீதிமன்றம்.