ரபேல் விவகாரம்: மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு! விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் முடிவு

Published by
Venu

பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கை நிராகரித்துள்ளது உச்சநீதிமன்றம். 

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பை கருதி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்த காலத்தில் ரபேல் விமானம் வாங்கும் முடிவை இந்தியா எடுத்தது. அதற்கான ஒப்பந்தத்தையும் நிறைவேற்றியது.

பழைய ஒப்பந்தம் :

Image result for manmohan singh rafale

கடந்த 2012ம் ஆண்டில் ஜனவரி மாதம்  மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்குவது என்றும் இந்திய திட்டமிட்டிருந்தது.

இவற்றில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும் என்றும்  மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்று  பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தமானது.

உற்பத்தி செய்யும் நிறுவனம் :

இதற்கான தொழில்நுட்பத்தை டஸ்ஸால்ட் நிறுவனம் வழங்க இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் (ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்) விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது. இந்த விமானம் தயாரிப்பது  குறித்து  ஹெச்ஏஎல் – டஸ்ஸால்ட் ஆகிய இரு நிறுவனங்கள் இடையேயான வேலை ஒப்பந்தம் 2014 மார்ச்சில் கையெழுத்தானது.

புதிய ஒப்பந்தம் :

 

அதற்கு பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் மோடி 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார் .

மேலும் 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர் முன்னிலையில் 2016 செப்டம்பரில் ரிலையன்ஸ்-டஸ்ஸால்ட் நிறுவனங்களுக்கிடையில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரபேல் விமானத்தின் விலை நிலவரம்: 

 

மன்மோகன் சிங் அரசு விமானத்தை வாங்கவிருந்த விலை சுமார் ரூ.79200 கோடி ஆகும் . ஆனால் ராபேல் விமானத்தை  தற்போதைய நரேந்திர மோடி அரசு சுமார் ரூ.58000கோடி விலைக்கு வாங்கியதாகவும் தகவல்கள் வெளியானது. மன்மோகன் சிங்கின் முந்தைய ஒப்பந்தப்படி, 18 விமானங்கள் மட்டுமே பறப்பதற்குத் தயாராக வாங்கப்படும். மீதி 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.

புதிய ஒப்பந்தத்தினால்  ஏற்பட்ட சர்ச்சை:

ஒப்பந்தப்படி அனைத்தும் பிரான்சு நாட்டில் தயாரிக்கப்படும். மன்மோகன் சிங்கின் முந்தைய ஒப்பந்தத்தில், டஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கும் என்று அறிவித்தது. இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் விமானத் துறையில் போர் விமானங்களைத் தயாரித்த அனுபவம் உள்ள நிறுவனம் ஆகும்.

இந்நிலையில் மோடியின் இன்றைய ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.  ஆனால் விமானத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனம் விமானங்களைத் தயாரிக்கவுள்ளது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.

 குற்றச்சாட்டு:

நரேந்திர மோடியின் அரசு ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் நாடாளுமன்ற நிலைக்குழு, டெண்டர், தொழில்நுட்பக் குழு, மதிப்பீடு, பரிசீலனை என எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவு அறிவிக்கப்பட்டதாகவும்  காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினார்கள்.

அதற்கு பிறகு காங்கிரஸ் கட்சியினர் போர் விமானம் குறித்த தொழில்நுட்பம் தான் இரகசியம்  காக்கபடவேண்டும்.அதன் விலை அல்ல என குற்றம் சாட்டியது.

இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அப்போதைய பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா ஆலந்து ரிலையன்ஸ் தான் கூட்டணியில்  இருக்க வேண்டும் என்று இந்திய அரசு வற்புறுத்தியதால் எங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை கூறியது மேலும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கு:

மேலும் இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் உச்ச நீதிமன்றம் ரபேல் போர் விமானம் வாங்கப்பட்ட தொகை, ஒப்பந்தம்  ஆகிய அனைத்தும் சரியான முறையில் தான் இருக்கிறது என தீர்ப்பு வழங்கியது. மேலும் அது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது.

மறு சீராய்வு மனு மீதான விசாரணை:

அதனை தொடர்ந்து மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யபட்டது.இதில் வழக்கு தொடர்ந்தவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்களது வாதத்தை முன் வைத்தனர்.அதேபோல் திருடுபோன ரபேல் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில்தான் பத்திரிகையில்  தகவல் வெளியிடப்பட்டது. அந்த ஆவணங்களை ஏற்கக்கூடாது என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான  சீராய்வு மனுக்களை இன்று  விசாரணைக்கு எடுத்துக்கொண்டது  உச்சநீதிமன்றம்.

அதில் ரபேல் விவகாரத்தில் பத்திரிக்கையில் வெளியான ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என்று  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது .பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கை நிராகரித்துள்ளது.எனவே  ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.அதேபோல் ரபேல் மறு ஆய்வு மனு மீதான விசாரணை தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Published by
Venu

Recent Posts

கங்குவா விமர்சனம் : பாசிட்டிவும், நெகட்டிவும் ரசிகர்கள் கூறுவது என்ன?

சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…

7 hours ago

AUS vs PAK : பொளந்து கட்டிய மேக்ஸ்வெல்! 29 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…

8 hours ago

பெய்ரூட் மீது வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மக்கள் வெளியேற வலியுறுத்தல்!

பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…

8 hours ago

தூத்துக்குடி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கனிமொழி! உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!

தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…

8 hours ago

சென்னையில் நேர்ந்த சோகம்! காற்றில் பறந்த எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழப்பு!

சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…

10 hours ago

லீக்கான அந்த மாதிரி வீடியோ? சமூக வலைத்தளங்களிருந்து விலகிய பாகிஸ்தான் டிக்டாக் பிரபலம்!

பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…

11 hours ago