ரபேல் போர் விமானத்தின் மிக முக்கிய சிறப்பு, எதிரிகளின் ரேடார் கண்களுக்கு தெரியாத அளவுக்கு சிறப்பான வடிவமைப்பு கொண்டது. இதன் அதீத வேகமும், இதனை கண்டறிவதும், தாக்குவதும் மிகவும் சவாலாக இருக்கும்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இவற்றில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும்.அதேபோல் மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்கான தொழில்நுட்பத்தை டஸ்ஸால்ட் நிறுவனம் வழங்க இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல் (Hindustan Aeronautics Limited) விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது. இதன்படி ஹெச்.ஏ.எல் (Hindustan Aeronautics Limited) – டஸ்சால்ட் (Dassault) இரு நிறுவனங்கள் இடையேயான வேலை ஒப்பந்தம் 2014 மார்ச்சில் கையெழுத்தானது.
பின்பு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015-ஆம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முன்பு எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக அறிவித்து, 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர் முன்னிலையில் 2016 செப்டம்பரில் ரிலையன்ஸ்-டஸ்சால்ட் (Dassault) நிறுவனங்களுக்கிடையில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு விமானத்தை வாங்கவிருந்த விலை சுமார் ரூ.79,200 கோடி. தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அரசு சுமார் ரூ.58,000கோடி விலையாகும். முந்தைய ஒப்பந்தப்படி, 18 விமானங்கள் மட்டுமே பறப்பதற்குத் தயாராக வாங்கப்படும். மீதி 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். தற்போதைய ஒப்பந்தப்படி அனைத்தும் பிரான்சு நாட்டில் தயாரிக்கப்படும். முந்தைய ஒப்பந்தத்தில், டஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கும். இன்றைய ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அதன் தொழில்நுட்பம் வழங்கப்படும். இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் விமானத் துறையில் போர் விமானங்களைத் தயாரித்த அனுபவம் உள்ள நிறுவனம் ஆனால் விமானத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனம் விமானங்களைத் தயாரிக்கவுள்ளது.
ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் நாடாளுமன்ற நிலைக்குழு, டெண்டர், தொழில்நுட்பக் குழு, மதிப்பீடு, பரிசீலனை என எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவு அறிவிக்கப்பட்டதாகவும். இதுபோன்ற விஷயங்களில் போர் விமானம் குறித்த தொழில்நுட்பம்தான் ரகசியமே தவிர, விலையை ரகசியமாக வைக்கத் தேவையில்லை என்றும் காங்கிரஸ் உட்பட எதிர் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், மோடி அரசு விலையை ரகசியம் என்கிறது. இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அப்போதைய பிரான்ஸ் பிரதமர் ஹோலண்டே ரிலையன்ஸ் தான் கூட்டாளியாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசு வற்புறுத்தியதால் எங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதி மன்றம் இந்த சர்ச்சை தொடர்பான வழக்கை விசாரனைக்கு ஏற்றுக்கொண்டு இது தொடர்பாக இந்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது.ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை இந்தியக் கூட்டாளியாகத் தேர்வு செய்ததில் முறைகேடு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் ரஃபேல் விமான ஒப்பந்த நடவடிக்கை, விலை நிர்ணயம் ஆகிய விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதற்கு உறுதியான காரணம் எதுவும் இல்லை என்றும் கூறி நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு வழக்கைத் தள்ளுபடி செய்தது.
ஆனால் இதன் பின்னரும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதேபோல் மார்ச் 06 -ஆம் தேதி மத்திய அரசு, பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்த ரபேல் ஆவணங்கள் திருடு போய்விட்டது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆவணங்களை காக்க முடியாத அரசு எப்படி நாட்டு மக்களை காப்பாற்றுவார்கள் என்று கடுமையாக தாக்கி வருகின்றனர்.
இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்ட நாள் முதல் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.ஆனால் ரபேல் விவகாரம் முடிந்தபாடு இல்லை …இன்னும் நீண்டுகொண்டே போகிறது ….
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…