மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு.
மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான உமாங் சிங்கார் மீது 38 வயது பெண் ஒருவர் காவல்நிலையத்தில், பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இதனையடுத்து, தார் நகரில் உள்ள நவ்கான் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து தார் போலீஸ் எஸ்பி ஆதித்யா பிரதாப் சிங் கூறுகையில், ‘காந்த்வானி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உமாங் சிங்கார், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் பெண், எம்எல்ஏ உமாங் சிங்கார் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மத்தியபிரதேச காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத் துறைத் தலைவர் கே.கே.மிஸ்ரா கூறுகையில், ‘எம்எல்ஏ மீதான வழக்கு குறித்து என்னிடம் எந்த தகவலும் இல்லை; ஆனால், அரசியல் உள்நோக்கத்துடன் அவர் மீது வழக்கு பதிந்திருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 294 (ஆபாசமான சட்டம்), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 376 (2) (கற்பழிப்பு), 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்), 498 (ஏ) (துன்புறுத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…