ரஃபேல் விவகாரத்தில் முறைகேடு: காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் ரஃபேல் போர் விமான கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டி காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையை நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார். பலத்த எதிர்ப்பார்ப்புக்கிடையே தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் ரஃபேல் போர் விமான கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டி காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி,முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.