அரியானா மாநிலச் சட்டமன்றத்தில் சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
12வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்வதைக் கொடிய குற்றமாகக் கருதி அத்தகைய குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கச் செய்யும் சட்டம் ஏற்கெனவே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியானா சட்டமன்றத்தில் நேற்று இதற்கான மசோதாவை அமைச்சர் ராம் விலாஸ் சர்மா கொண்டுவந்தார்.
அப்போது காங்கிரஸ் உறுப்பினர் கிரண் சவுத்ரி பாதிக்கப்படுபவர்களின் வயதைக் கருத்தில் கொள்ளாமல் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனினும் அவரது வேண்டுகோள் ஏற்கப்படவில்லை. முந்தைய வடிவிலேயே சட்டமசோதா அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தங்கம் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,920 உயர்ந்துள்ளது. இன்று புதிய உச்சமாக சவரனுக்கு…
நாக்பூர் : 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வரும் நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள்…
சென்னை : தமிழகமே பெரிதும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.…
கர்நாடகா : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கார் மீது ஆட்டோ மோதிய சம்பவம் பரபரப்பை…
டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இன்று ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), மில்கிபூர் (உ.பி.) தொகுதிகளிலும்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்…