கடைசி பணி நாளை நிறைவு செய்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து இருந்த ரஞ்சன் கோகாய் இன்று தனது கடைசி பணி நாளை நிறைவு செய்தார். இன்று அவருக்கு உச்சநீதிமன்ற பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் நன்றி தெரிவித்தனர். அவர் நாளை மறுநாள் ஞாயிற்று கிழமை அவர் ஓய்வு பெறுகிறார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சன் கோகாய். முதலில் ஹௌஹாத்தி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கி, பின்னர், 2001இல் ஹௌஹாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியாக தனது நீதிபதி பயணத்தை தொடங்கினர். பின்னர், பஞ்சாப், ஹரியானா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பதவிவகித்துள்ளார். பின்னர், 2012இல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அடுத்து 2018 அக்டோபரில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். வடகிழக்கு இந்தியாவில் இருந்து வந்த முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.