ராஞ்சியின் முதல் ஓரினச்சேர்க்கை தம்பதி.! லிவ்-இன் டுகெதரில் இருந்து திருமணம் செய்த சகோதரிகள் .!
லிவ் இன் டுகெதரில் இருந்த இரண்டு சகோதரிகள் திருமணம் செய்து கொண்டு , ராஞ்சியின் முதல் லெஸ்பியன் தம்பதிகளாக மாறியுள்ளனர் .
ராஞ்சியிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள கோடெர்மா நகரில் உள்ள இரண்டு சகோதரிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் தங்களது குடும்பத்தினருக்கு தெரியாமல் லிவ் இன் ரிலேஷன்சிப்பில் இருந்து வந்தனர். அதனையடுத்து ஜும்ரி திலையாவில் வசிக்கும் இவர்கள் கடந்த நவம்பர் 8-ம் தேதி ஒரு சிவன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். கோடெர்மா நகரில் இதுவே முதல் ஓரினச் சேர்க்கை திருமணமாகும்.
லெஸ்பியன் தம்பதிகளான இவர்களில் ஒருவருக்கு 24 வயதும் , மற்றவருக்கு 22 வயதுமாகும். மேலும், ஒருவர் பட்டப்படிப்பை படித்தவர். மற்றொருவர் இன்டர் படிப்பை படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நியூயார்க்கில் வசிக்கும் லெஸ்பியன் தம்பதிகளான அஞ்சலி சக்கரவர்த்தி மற்றும் சூஃபி சான்டல்ஸ் என்பவரால் ஈர்க்கப்பட்ட கோடெர்மா நகர் லெஸ்பியன் தம்பதியினர் பல பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக வேறு மாவட்டத்தில் குடியேற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்களுக்கு ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டப்பூர்வமானது தெரியும் என்றும், தங்களுக்கு எந்த சிரமங்கள் ஏற்பட்டாலும் நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்போம் என்றும் கூறியுள்ளனர்.