பமத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானின் உடல்பாட்னாவில், அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக பணியாற்றிய ராம்விலாஸ் பஸ்வான், 74, உடல் நலக்குறைவு காரணமாக, டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.இந்நிலையில், மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம், நேற்று காலை கூட்டப்பட்டு மறைந்த பஸ்வானுக்கு, 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்பின், பஸ்வானின் மறைவுக்கு, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பஸ்வானின் உடல் அவரது சொந்த மாநிலம் பீஹார் தலைநகர் பாட்னாவில் முழு அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்படும் என்றும் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பங்கேற்பார் என்று மத்திய அரசு சார்பில் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் உடல், டில்லியில் உள்ள அவரது இல்லத்தில்பொதுமக்கள்,தலைவர்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டு இருந்தது.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…