ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்த மர்ம பொருள்.. விசாரணைக்கு வந்த என்.ஐ.ஏ..!

Rameshwaram Cafe

Rameshwaram Cafe: பெங்களூருவில் ஒயிட்ஃபீல்டில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கஃபேவில் வெள்ளிக்கிழமை(இன்று ) மதிய உணவு நேரத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் மூவர் ஓட்டலின் பணியாளர்கள், எனவும் ஒருவர் வாடிக்கையாளர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE- மக்களவை தேர்தலில் போட்டியா? – அண்ணாமலை கொடுத்த அதிரடி அறிவிப்பு!

இந்த சம்பவம் நடந்த உடனே ராமேஸ்வரம் கஃபேவிற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் தடயவியல் குழு ஓட்டலில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். வெடிவிபத்திற்குப் பிறகு தீ எதுவும் ஏற்படவில்லை எனவும் இது சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது போல் தெரியவில்லை அங்கு இருந்தவர்கள் தெரிவித்தன.

அனைத்து கோணங்களிலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரம் கஃபேவில் வெடித்த மர்ம பொருள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குழு ஓட்டலுக்கு வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.

READ MORE- பிப்ரவரில் 86.15 லட்சம் பேர் பயணம்.. சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

இந்த குண்டுவெடிப்பு உணவகத்தில் இருந்த எந்தவொரு பொருளாலும் ஏற்படவில்லை என்றும், வெளியில் இருந்து உணவகத்திற்குள் கொண்டு வரப்பட்ட சில பொருட்களால் வெடித்துள்ளது என்று ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay