ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு: ரூ. 10 லட்சம் சன்மானம்

Rameshwaram Cafe: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம் சன்மானம்.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கடந்த மார்ச் 1ம் தேதியன்று பிரபல உணவகமான ராமேஸ்வரம் கபேயில் குண்டுவெடித்தது. இதில் பலர் காயமுற்றனர். இந்த சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவராக சந்தேகிக்கப்படும் இருவரை பற்றிய விவரங்களையும் NIA தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய முசாமில் ஷரீப் என்பவரை NIA அதிகாரிகள், டெல்லியில் நேற்று முன் தினம் கைது செய்தனர். ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, வழக்கில் தேடப்படும் இரண்டு முக்கிய குற்றவாளிகளுக்கு முசாமில் ஷரீப் உதவியது NIA விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் NIA தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி, இவ்வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளான முசாவிர் ஹுசைன் ஷாசிப் என்கிற ஷாசெப் மற்றும் அப்துல் மதின் அகமது தாஹா என்கிற அப்துல் மதீன் தாஹா பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெகுமதி அறிவிப்புடன், சந்தேகத்திற்குரிய இருவரின் புகைப்படங்களையும் NIA வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்