கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் பதவியில் இருந்து விலகினார்.
கர்நாடக அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக சில எம்எல்ஏக்கள் தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எடியூரப்பா தலைமையிலான பாஜகவிற்கு கிடைத்தது.பின்னர் ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.
இதனால் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார்.பதவி ஏற்புக்கு பின்னர் இன்று தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பதாக தெரிவித்தார். நேற்று சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிவிப்பில்,ராஜினாமா செய்த 17 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார்.
இன்று நடைபெற்ற பேரவையில் எடியூரப்பா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது.நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் 105 பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் 1 சுயேட்சை எம்.எல்.ஏ எடியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றிபெற்ற நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமார் பதவியில் இருந்து விலகினார்.திடீரென ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகரிடம் கொடுத்து விட்டு இருக்கையிலிருந்து சென்று விட்டார் ரமேஷ் குமார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி கள்ளக்குறிச்சி : 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக்தில் ஒரு சில தினங்களாக கனமழை…
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…