ரம்ஜான் பண்டிகை:இன்று இங்கு தொழுகை நடத்த அனுமதி!
ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் புனித ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,காலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டும் இரண்டு மணி நேரம் தொழுகை செய்ய அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம்,இசுலாமிய மக்களுக்கு தமிழக முதல்வர்,அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள்,பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.