Today’s Live: இந்தி நடிகர்களை கலாய்த்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்..!

Default Image

அன்புமணி கலாய்:

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தி நடிகர்களை கலாய்க்கும் வகையில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ரயில், பேருந்து, பொது இடங்களில் பான் மசாலா விற்பனை செய்யும் நபர்களின் படங்களுடன், ஐபிஎல் போட்டியின் விளம்பர இடைவெளியில் பாலிவுட் நடிகர்கள் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இவரது பதிவிற்கு ஆதரவும். கண்டனங்களும் எழுந்துள்ளது.


22.04.2023 1:15 PM

வானிலை அறிவிப்பு:

தமிழ்நாட்டில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், தி.மலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

22.04.2023 12:45 PM

மம்தா பானர்ஜி ஆவேசம்:

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஈகை திருநாள் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார். அதில், “வங்காளத்தில் அமைதியை விரும்புகிறோம். எங்களுக்கு கலவரம் வேண்டாம். நாட்டில் பிளவுகளை உருவாக்க நினைப்பவர்களுக்கு உறுதியளிக்கிறேன். நாட்டின் ஒற்றுமைக்காக தனது உயிரை விடக் கூட தயாரா இருக்கிறேன். ஆனால் ஒருபோதும் நாட்டை பிரிக்க விடமாட்டேன்” என பாஜக உள்ளிட்ட கட்சிகளை சாடி ஆவேசமாக பேசினார்.

22.04.2023 12:20 PM

ஒரு கோடி நிவாரணம்:

ஜம்முவின் பூஞ்ச் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ வாகனத்தின் மீது நடைபெற்ற தாக்குதலில் 5 வீரர்கள் பலியானார்கள். இவர்களில் 4 பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள் ஒருவர் ஒடிசாவை சேர்ந்தவர். இந்நிலையில், பஞ்சாபை சேர்ந்த உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் பகவந்த் மான். அவர்களின் குடும்பத்தாருக்கு தலா 1 கோடி நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

22.04.2023 11:00 AM

இபிஎஸ் கடும் எதிர்ப்பு:

கர்நாடக தேர்தலில் 2 தொகுதிகளில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக தலைமை எழுதியுள்ள கடிதத்தில் தவறான புரிதலால் தேர்தல் நடத்தும் அலுவலர் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் மனுவை ஏற்றுள்ளார். இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட இபிஎஸ்-க்கு மட்டுமே அதிகாரம் உண்டு என தெரிவித்துள்ளது.

22.04.2023 10:15 AM

ஆர்.என்.ரவி வாழ்த்து:

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஒரு மாத நோன்பை கடைப்பிடித்து, இல்லாதோருக்கு ஈகை அளித்து சகோதரத்துவத்தை முன்னிறுத்தும் ரமலான் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ஈகைத்திருநாளாம் ரமலான் திருநாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

22.04.2023 08:05 AM

ரமலான் பண்டிகை:

ரமலான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம் தொடங்கியது . மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்தனர். மேலும், சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் விடிய, விடிய களைகட்டிய பண்டிகையின் இறுதிக்கட்ட வியாபாரம்; கொரோனா காலத்தில் முடங்கிப் போன வியாபாரம் 3 ஆண்டுகளுக்கு பிறகு அமோகமாக நடைபெற்றது.

22.04.2023 07:20 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்