இந்தியா முழுவதும் தீபாவளி போல கொண்டப்பட்ட ராமர் கோவில் திறப்பு விழா..!

Ram Lalla

அயோத்தியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் திறப்பு விழாவை நேற்று நாடு முழுவதும் கொண்டாடிய நிலையில் ராமர் கோஷங்கள், சுவரொட்டிகள், காவி கொடிகள் மற்றும் பட்டாசுகளுடன் தீபாவளி போன்ற உற்சாகத்தில் மூழ்கியது.

மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற தலைவர்கள் உட்பட பலர் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி கொண்டாடினர். ​​சிலர் தெருக்களில் சிறப்பு விளக்குகளை ஏற்றியும், பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.

மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற அரசியல் தலைவர்கள்  உட்பட பலர் தங்கள் வீடுகளில் ‘தீபோத்ஸவ்’ கொண்டாடியபோது, ​​சிலர் தெருக்களில் வந்து சிறப்பு விளக்குகளை ஏற்றியும்  பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்.

ராமர் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

மாநிலங்கள் முழுவதும் கொண்டாட்டங்கள்:

ராமர் கோயில் திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், தமிழ்நாட்டில் சென்னையில் பலர் ‘தீபோற்சவம்’ விழாவாக  கொண்டாடினர். செய்தி நிறுவனமான ANI வெளியிட்ட வீடியோவில், மக்கள் கூட்டமாக  ஒரு தெருவில் தீபங்களை ஏற்றி வைப்பதைக் காணலாம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில், மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூரில் உள்ள காங்சபதி ஆற்றின் கரையில் 1,001 ‘விளக்குகள் ’ ஏற்றப்பட்டுள்ளன.

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சுவாமிநாராயண் குருகுல் விஸ்வவித்யா பிரதிஸ்தானம் (எஸ்ஜிவிபி) குருகுலம் ராமர் கோயில் திறப்பைக் குறிக்கும் வகையில் திங்கள்கிழமை மாலை நூற்றுக்கணக்கான சிறப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. கல்லூரிகள் அருகே பலர்  பட்டாசுகளும் வெடித்தனர்.

பட்டாசுகள் சண்டிகரில் வானத்தை அலங்கரித்து, உள்ளூர் மக்கள் இதை சிறப்பாக கொண்டாடினர்.

கேரளாவில், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலில், ‘ராம் ஜோதி’ ஏற்றி, ஏராளமானோர் காணிக்கை செலுத்தி சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். பிடிஐ வெளியிட்ட ஒரு வீடியோவில், சில குழந்தைகளுக்கு ராமர் போல் வேடமிட்டு குழுமிருந்தனர்.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரின் கோட்டா பகுதியில் அயோத்தி ராமர் கோவிலான ‘பிரான் பிரதிஷ்டா’ விழாவை முன்னிட்டு மக்கள் ஏராளமானோர் அகல்  விளக்குகளை ஏற்றி வைத்தனர்.

திங்கள்கிழமை மாலை ஹரித்வாரில் உள்ள ஹரி கி பவுரியில் பிரமாண்டமான தீபங்களை ஏற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

ராமர் கோவிலின் ‘பிரான் பிரதிஷ்டை’ விழாவிற்குப் பிறகு பெங்களூரில் உள்ள இஸ்கான் கோவிலில் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டன.


பீகாரிலும் பக்தர்கள் தீபங்களை ஏற்றி ‘தீபோற்சவ ’ விழாவாக  கொண்டாடினர்.

டெல்லி மற்றும் அதன் அண்டை தேசிய தலைநகர் மண்டலம் (NCR) முழுவதும் பிரமாண்டமான கொண்டாட்டங்கள் காணப்பட்டன.

வடகிழக்கு மாநிலங்களிலும் பலர் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை கொண்டாடினர். கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோயில் மற்றும் பாசிஸ்தா கோயிலில் தலா ஒரு லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.

அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் ராமர் சிலையின் பிரதிஷ்டா விழாவுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை தனது இல்லத்தில் ‘ராம் ஜோதி’ (தீபம்) ஏற்றி வைத்தார். அனைத்து மக்களையும் அவ்வாறே செய்யுமாறு மோடி வலியுறுத்தினார்.மேலும், இந்த புனிதமான நேரத்தில், அனைத்து மக்களும் ராம ஜோதியை ஏற்றி, ராமரை தங்கள் வீடுகளில் வரவேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் தெரிவித்தார்.

ராமர் கோவில் திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில் பல மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற தலைவர்களும் தீபங்கள் ஏற்றி கொண்டாடினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29032025
MS Dhoni - CSK vs RCB Match
Myanmar Earthquake - Indian govt relief
CSK Team IPL 2025
TVK leader Vijay - BJP State president Annamalai
Chennai Super Kings vs Royal Challengers Bengaluru
myanmar earthquake