மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் (74) கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த 3-ஆம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.இதனிடையே கடந்த 8 -ஆம் தேதி ராம்விலாஸ் பஸ்வான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராம் விலாஸ் பஸ்வான் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இன்று பீகாரில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், கிரிராஜ் சிங், நித்யானந்த் ராய், அஷ்வினி குமார் ,பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…