உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பூஜை நிறைவு பெற்றது. அதன்படி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கண்களில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் நிற துணி அகற்றப்பட்டது.
பிரதமர் மோடி, உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் சடங்குகளின் போது கருவறைக்குள் இருந்தனர். இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் நிறுவப்பட்டுள்ள ராமருக்கு முதல் பூஜை பிரதமர் மோடி செய்தார். பால ராமர் சிலைக்கு முதலாவதாக பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.
வரலாற்று நிகழ்வு.! திறக்கப்பட்ட ராமர் சிலை.! பிரதமர் மோடி உள்ளிட்டோர் சாமி தரிசனம்.!
ராமர் சிலைக்கு தேங்காய், பழங்கள் படைத்து பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். பிரதமர் மோடியை தொடர்ந்து மோகன் பகவத், ஆனந்திபென் படேல், யோகி ஆதித்யநாத் வழிபாடு செய்தனர். மலர்கள் தங்க ஆபரணங்களால் பால ராமர் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. குழந்தை ராமர் சிலை திறப்பின் போது ஹெலிகாப்டர் மூலம் கோவில் வளாகத்தில் மலர்கள் தூவப்பட்டன.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…