ராமர் கோயில்.. முதல் பூஜை செய்த பிரதமர் மோடி..!

Ram temple

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பூஜை நிறைவு பெற்றது. அதன்படி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கண்களில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் நிற துணி அகற்றப்பட்டது.

பிரதமர் மோடி, உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் சடங்குகளின் போது கருவறைக்குள் இருந்தனர். இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் நிறுவப்பட்டுள்ள ராமருக்கு முதல் பூஜை பிரதமர் மோடி செய்தார். பால ராமர் சிலைக்கு முதலாவதாக பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.

வரலாற்று நிகழ்வு.! திறக்கப்பட்ட ராமர் சிலை.! பிரதமர் மோடி உள்ளிட்டோர் சாமி தரிசனம்.!

ராமர் சிலைக்கு தேங்காய்,  பழங்கள் படைத்து பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். பிரதமர் மோடியை தொடர்ந்து மோகன் பகவத், ஆனந்திபென் படேல், யோகி  ஆதித்யநாத் வழிபாடு செய்தனர்.  மலர்கள் தங்க ஆபரணங்களால் பால ராமர் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. குழந்தை ராமர் சிலை திறப்பின் போது ஹெலிகாப்டர் மூலம் கோவில் வளாகத்தில் மலர்கள் தூவப்பட்டன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்