ராமர் கோவில் பூமி பூஜை – உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு இல்லையா ?
ராமர் கோயில் கட்டுமானத்திற்கான “பூமி பூஜை” விழாவில் பங்கேற்பதற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு அனுப்பப்படாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நீண்ட காலமாக சட்டப்போராட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் இறுதியாக உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது. எனவே அங்கு கோயிலை கட்டுவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது.
பிரதமர் மோடி ஆகஸ்ட் -5 ஆம் தேதி ராமர் கோயில் கட்டுமான பணிகளைத் தொடங்கி வைப்பதற்கு “பூமி பூஜை” விழாவிற்கு அயோத்தியாவுக்கு செல்கிறார். லட்சக்கணக்கான மக்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள ஆர்வம் கொண்டுள்ளார்கள்.இந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்கிறார்.இந்த விழாவில் பங்கேற்க முக்கிய நபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தான் சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு அனுப்பப்படாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று தீவிரமாக இருந்த கட்சிகளில் ஓன்று சிவசேனா என்பது குறிப்பிடத்தக்கது.