ராமர் கோயில் “பூமி பூஜை” விழாவை காணொலி மூலம் நடத்த முடியும் – உத்தவ் தாக்கரே
ராமர் கோயில் கட்டுமானத்திற்கான “பூமி பூஜை” விழாவை காணொலி மூலம் நடத்த முடியும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கான விழாவை காணொலி மூலம் நடத்த முடியும் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சிவசேனாவின் தலைவரான உத்தவ் தாக்கரே இந்த விழாவிற்கு உத்தரப்பிரதேச அயோத்தியாவுக்குச் செல்லலாம் என்று கூறினார். ஆனால் லட்சக்கணக்கான “ராமர் பக்தர்கள்” அங்கு செல்வதைத் தடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் கூறுகையில், பிரதமர் மோடி ஆகஸ்ட் -5 ஆம் தேதி ராமர் கோயில் கட்டுமான பணிகளைத் தொடங்கி வைப்பதற்கு “பூமி பூஜை” விழாவிற்கு அயோத்தியாவுக்கு வருவார்.
இது மகிழ்ச்சியான நிகழ்வு, மற்றும் லட்சக்கணக்கான மக்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள ஆர்வம் கொண்டுள்ளார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை நாங்கள் அனுமதிப்போமா என உத்தவ் தாக்கரே இன்று பேட்டியில் கூறினார். இந்நிலையில் ராம் கோயில் பிரச்சினை போராட்டத்தின் பின்னணி உள்ளது அதனால் காணொலி மூலம் நடத்த முடியும் என்று அவர் பரிந்துரைத்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி சேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி (எம்விஏ) அரசாங்கத்தின் முதல்வராக அவர் பதவியேற்றார், 100 நாட்கள் பதவியில் இருந்ததை நினைவு கூருவதற்காக தாக்கரே மார்ச் மாதம் அயோத்தி சென்றார் என்பது குறிப்பித்தக்கது.