ராமர் அனைவருக்கும் பொதுவானவர் -பிரதமர் மோடி

Default Image

ராமர் அனைவருக்கும் பொதுவானவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமஜென்ம பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.அவர்  பேசுகையில், ராமர் கோவிலுக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் களத்தில் இறங்கி போராடினர்.இந்தியர்களின் தியாகம், போராட்டம் காரணமாக ராமர் கோவில் எனும் கனவு நனவாகியுள்ளது .ராமர் கோவிலுக்காக போராடிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நேபாளத்திற்கும் ராமருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு உள்ளது.கடமையே முக்கியம் என கற்பித்தவர் ராமர். ராமர் அனைவருக்கும் பொதுவானவர்.முஸ்லீம்கள் அதிகம் வாழும் இந்தோனேஷியாவில் பல ராமாணயங்கள் பயன்பாட்டில் உள்ளன.ராமர் கோவில் அமைய உள்ள பிரதேசத்தின் பொருளாதாரம் மேம்படும் .அயோத்தி மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராகி வருகிறது .அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் தேசத்தை ஒருங்கிணைக்கும்.அயோத்தி ராமர் கோவில் ஒற்றுமைக்கு ஒரு பாலமாக அமையும் என்று பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்