டெல்லியில் ராகுல் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம்! முக்கிய தேதியில்!
இந்தியாவில் மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் எழு கட்டமாக நடந்து வரும் தேர்தலுக்கு வருகிற மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியிடப்படும்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அனைத்து கட்சிகளும் படு சுறுசுறுப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் அணைத்து எதிர்க்கட்சிகளும் கூடி முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தெரிகிறது.
தேர்தல் முடிவுகள் மே 23இல் வெளியாக உள்ள நிலையில் இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
DINASUVADU