கிருஸ்தவ பள்ளியில் ராக்கி கயிற்றை கழற்ற சொன்னதால் எழுந்த சர்ச்சை.. விளக்கம் கூறிய நிர்வாகம்.!
ராக்ஷச பந்தன் அன்று கயிறு கட்டி பள்ளி சென்ற மாணவர்களின் கையில் கட்டி இருந்த கயிறை நீக்க சொன்னதால், சர்ச்சை எழுதாதது. பின்னர், பள்ளி நிர்வாகம் இது குறித்து வருத்தம் தெரிவித்தது.
கடந்த வியாழக்கிழமை இந்தியா முழுவதும் ராக்ஷச பந்தன் எனும் சகோதரத்துவ நாள் கொண்டாடப்பட்டது. பலரும் தங்கள் வாழ்த்துக்களை, உடன் பிறந்த மற்றும் உடன்பிறவா சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
அப்படி தான் , கர்நாடகா மாநிலத்தில், மங்களூருவில் செயல்பட்டு வரும் ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில், ராக்கி கயிறு கட்டி சில மாணவர்கள் வந்துள்ளனராம்.
அப்போது அங்கிருந்த சில பள்ளி ஊழியர்கள், நகைகள் பள்ளியில் அனுமதியில்லை என கூறி மாணவர்களிடம் ராக்கிகளை அகற்றுமாறு கூறியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, சில மாணவர்களின் பெற்றோரின் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த எதிர்ப்பை அடுத்து, பள்ளி நிர்வாகம், ‘ அனைத்து மதங்களின் கோட்பாடுகளையும் நாங்கள் கடைப்பிடிக்கிறோம். எங்கள் ஊழியர்கள் சிலரின் தவறுதலால் இந்த சம்பவம் நடைபெற்று விட்டது’ என்று வருத்தம் தெரிவித்துள்ளது.