விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் மழை நீர் தேங்கிய சாலையில் அமர்ந்து போராட்டம்!
விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் மழை நீர் தேங்கிய சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளிடம் மத்திய அரசு பல சுற்று பேச்சு வார்த்தை மேற்கொண்டும் எந்த பயனுமில்லை, தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை நடத்தி கொண்டு தான் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக டெல்லியில் கனமழை பெய்து வருகிறது.
டெல்லியின் முக்கியமான சில பகுதிகளில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதிகளில் உள்ள தற்காலிக கூடாரங்கள் அனைத்தும் இதனால் சேதமடைந்துள்ளதால், அப்பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் படி விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் மழை நீர் அகற்றப்படாததால் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் மழை வெள்ளம் தேங்கியுள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.