கொரோனா விவகாரம்… ராஜ்யசபா தேர்தல் ஒத்திவைப்பு… ராஜ்ய சபா செயலகமும் மூடல்…

இந்தியாவின் மாநிலங்களவை என்று அழைக்கப்படும் ராஜ்யசபாவில் பதவிக்காலம் முடிந்த 55 காலி இடங்களுக்கான தேர்தல், நாளை நடைபெறும் என, அறிவிக்கப் பட்டிருந்தது. இதில், 37 வேட்பாளர்கள், ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இந்நிலையில், மீதி, 18 இடங்களுக்கான தேர்தல், நாளை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், ராஜ்யசபா தேர்தலை, வரும் 31 ம் தேதிக்குப் பின் நடத்த, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்தலில், அரசியல் கட்சிகளின் முகவர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், இணைந்து பணியாற்ற வேண்டும் என்ரும்,கொரோனா பரவுவதை தடுக்க, கூட்டம் கூடாமலிருக்க வேண்டும் என, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.இதனால், ராஜ்யசபா தேர்தலை, 31ம் தேதிக்குப் பின் ஆலோசித்து நடத்த, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, ராஜ்யசபா செயலகம், வரும்,27 வரை மூடப்படும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025