வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 14- ஆம் தேதி முதல் தொடங்கி விடுமுறையின்றி அக்டோபர் 1-ஆம் தேதிவரை நடைபெறும் எனவும், கொரோனா வைரஸ் சூழலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.அதன்படி நடைபெற்று வருகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்.
அந்தவகையில் கடந்த 21-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா (foreign contribution regulation act )என்பது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சரியான முறையில் பதிவு செய்து, வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதியை மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறுவதே ஆகும்.வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா சான்றிதழை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மத்திய அரசிடம் வழங்க வேண்டும். தங்களுக்கு வரும் மொத்த வெளிநாட்டு நிதியில் 20 % மேல் நிர்வாக செலவிற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாது. ஆதார் எண்ணை அடையாளச் சான்றிதழாக கட்டாயம் அளிக்க வேண்டும். பிரத்யேக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா வங்கி கணக்குகளில் மட்டுமே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியைப் பெற வேண்டும். மேலும் பொதுத்துறை ஊழியர்கள் வெளிநாட்டு நிதியுதவி பெறும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.