டெல்லி: பாராளுமன்றத்தில் இன்று காலை முதலே நீட் முறைகேடுகள் தொடர்பான விவாதம் நடத்த வேண்டும் என இந்தியா கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் இரு அவைகளும் முதலில் பகல் 12 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டன.
பிற்பகல் 2 மணிக்கு சபை கூடிய போதும் இதே கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2.30 மணி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன. பின் பிற்பகல் 2.30 மணிக்கு சபை மீண்டும் கூடிய போதும் எதிர்க்கட்சிகள் தங்களது கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அப்போதும் ராஜ்யசபா தலைவரான ஜக்தீப் தன்கர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதனால் ராஜ்யசபாவில் இருந்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், ராஜ்யசபாவில் முழக்கமிட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் எம்பி பூலோ தேவி நேகம் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பாரளுமன்றத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு RML (Ram Manohar Lohia Hospital) மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…