நீட் விவாதம்: மயங்கி விழுந்த ராஜ்யசபா எம்பி பூலோ தேவி ..!

Rajya Sabha MP Phulo Devi Netam

டெல்லி: பாராளுமன்றத்தில் இன்று காலை முதலே நீட் முறைகேடுகள் தொடர்பான விவாதம் நடத்த வேண்டும் என இந்தியா கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் இரு அவைகளும் முதலில் பகல் 12 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டன.

பிற்பகல் 2 மணிக்கு சபை கூடிய போதும் இதே கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2.30 மணி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன. பின் பிற்பகல் 2.30 மணிக்கு சபை மீண்டும் கூடிய போதும் எதிர்க்கட்சிகள் தங்களது கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அப்போதும் ராஜ்யசபா தலைவரான ஜக்தீப் தன்கர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதனால் ராஜ்யசபாவில் இருந்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், ராஜ்யசபாவில் முழக்கமிட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் எம்பி பூலோ தேவி நேகம் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.  இதை தொடர்ந்து பாரளுமன்றத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு RML (Ram Manohar Lohia Hospital) மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
bumrah MI
Sardar2
Nitish Kumar woman at event sparks row
tamilisai soundararajan about tvk vijay
virender sehwag ms dhoni
iran trump