நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 12 மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு 41 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
நாடு முழுவதும் உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்குவங்கம், குஜராத், கர்நாடகா, ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு பிப்.27ம் தேதி தேர்தல் நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வெளியிட்டு இருந்த நிலையில், வேட்புமனுக்கள் பிப்.8ம் தேதி முதல் பிப்.15ம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்டு நிறைவு பெற்றது.
பேச்சுவார்த்தைகள் தோல்வி.. மீண்டும் டெல்லி நோக்கி பேரணி..!
இதன்பின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை பிப்.16ம் தேதி நடைபெற்ற நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், 12 மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட் 41 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 41 பேரில் பாஜக 20 எம்பிக்களுடன் முன்னிலை வகிக்கிறது. அதன்படி, பாஜக அதிகபட்சமாக 20 இடங்களை வென்றுள்ளது, அதைத் தொடர்ந்து காங்கிரஸ் (6), திரிணாமுல் காங்கிரஸ் (4), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (3), ஆர்ஜேடி (2), பிஜேடி (2) மற்றும் என்சிபி, சிவசேனா, பிஆர்எஸ் மற்றும் ஜேடி- யூ தலா 1 என மொத்தம் 41 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக தேசிய ஜேபி நட்டா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிசாவில் இருந்து மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் இருந்து இணையமைச்சர் எல் முருகன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுபோன்று ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி முதல்முறையாக மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளார்.
எனவே, உத்திரபிரதேசத்தில் 10, கர்நாடகாவில் 4 மற்றும் இமாச்சல பிரதேசத்தில் 1 உட்பட மீதமுள்ள 15 இடங்களில் முடிவுகள் வெளிவரவில்லை, ஆனால், உபியில் 7 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என கூறப்படுகிறது. இருப்பினும், மாநிலங்களவை தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ முடிவுகள் பிப்ரவரி 27ம் தேதி முறையாக அறிவிக்கப்படும்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…