ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு மாநிலங்களவையில் வாழ்த்துகள்.!
ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபாவில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில், இரு அவைகளிலும் நேற்று தொடர் அமளி நிலவியதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல்காந்தி பேசியதற்காக, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஆளும் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும் எதிர்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் நேற்று முதல் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இன்று இரண்டாவது நாள் தொடங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில், ஆஸ்கர் விருது வென்ற “ஆர்.ஆர்.ஆர்” குழு மற்றும் “தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்” குழுவினருக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்த சாதனைகள் இந்திய கலைஞர்களின் திறமை, மகத்தான படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு உலகளாவிய அளவில் கிடைக்கும் பாராட்டை எடுத்துரைக்கின்றன. உண்மையில் இது நமது இந்தியர்களின் உலகளாவிய எழுச்சி மற்றும் அங்கீகாரத்தின் மற்றொரு அம்சம் என்று ராஜ்ய சபா தலைவர் ஜெகதீப் தங்கர் கூறினார்.