மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஜூன் 17 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது.தொடர்ந்து நடைபெற்ற மாநிலங்களவையில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.குறிப்பாக நேற்று முன்தினம் கூட காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மாநிலங்களவை கூடியது.அவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இதன் பின்னர் பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு, நாடாளுமன்ற கூட்டத்தொடர் 17 ஆண்டுகளில் முதல்முறையாக சிறப்பாக நடந்துள்ளது.மாநிலங்களவையின் 35 அமர்வுகளில் 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.பின்னர் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
நேற்று மக்களவை கூட்ட தொடர் நிறைவு பெறுவதாக மக்களவை சபாநயார் ஓம் பிர்லா அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025
வக்பு வாரிய சட்டத்திருத்தம் : ” ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?” தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!
April 3, 2025