உத்தரபிரதேச மாநிலம் நொய்டா தொகுதியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் 2 லட்சத்து 44 ஆயிரத்து 091 வாக்குகள் பெற்றார். பாஜகவின் பங்கஜ் சிங் 70.84 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். பங்கஜா சிங்குக்கு எதிரான சமாஜ்வாதி வேட்பாளர் 62,722 வாக்குகள் பெற்றார். சட்டசபை தேர்தலில் இது மிகப்பெரிய வெற்றியாகும்.
மக்களுக்கு நன்றி கூறிய பங்கஜ் சிங்:
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து, பங்கஜ் சிங் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நொய்டா மக்கள் அளித்த அன்பு மற்றும் ஆசிர்வாதத்தால் தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக பங்கஜ் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி:
உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி மீண்டும் வந்துள்ளது. இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக மீண்டும் அங்கு ஆட்சியை பிடித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.பாஜக 255 இடங்களிலும், சமாஜ்வாதி 111 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் மூன்றாவது இடத்தையும், பகுஜன் சமாஜ் கட்சி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…