ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்!ஆலோசனை வழங்க குழு அமைக்கப்படும்-ராஜ்நாத் சிங்
ஒரே தேசம் ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு கூட்டியுள்ள அனைத்து கட்சிகளின் கூட்டமானது டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இதன் பின்னர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆலோசனை வழங்க குழு அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.