இன்று ராஜ்நாத் சிங் எல்லைப் பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் அறிக்கை .!

சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சி மத்திய அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்குமாறு பலமுறை கோரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவின் எல்லையில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டு வரிசை (எல்ஐசி) முன்னேற்றங்கள் குறித்து இன்று மாநிலங்களவையில் உரையாற்றவுள்ளார்.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சர் முன்னதாக செவ்வாய்க்கிழமை மக்களவையில் தனது அறிக்கையை வெளியிட்டார். மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங்கின் உரை காலை 11 மணியளவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.