நானும் சிறிது நேரம் போர் விமானத்தை இயக்கினேன்! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மகிழ்ச்சியுடன் பேட்டி!
முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை பயணித்தார். இந்த விமானம் இன்று காலை கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து செயப்படுத்தப்பட்டது. இந்த போர் விமானத்தில் இரண்டு இறக்கைகள் உண்டு. மணிக்கு 2,205 ககி.மீ வேகத்தில் பறந்து செல்லும் திறன் கொண்டது.
இந்த விமானத்தில் பயணித்த பிறகு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாகவும், அதில் பயணிப்பது வசதியாகவும் இருக்கிறது என குறிப்பிட்டார். மேலும் விமானப்படை அதிகாரி திவாரி உடன் பயணிக்கையில், அவரின் மேற்பார்வையில் சிறிது நேரம் போர் விமானத்தை இயக்கினேன். அத்தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என குறிப்பிட்டார். மேலும், போர் விமானங்களை தயாரித்து ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என குறிப்பிட்டார்.